மொத்த மார்கெட் மிரளும் ஒத்த போன்.. 6.6 மிமீ ஸ்லிம்ல 6500mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான ஸ்லிம் பாடியில் ஹூவாய் மேட் 70 ஏர் (HUAWEI Mate 70 Air) மாடலானது வெறும் 6.6 மிமீ ஸ்லிம் பாடியில் 6500mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இதுபோக ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 66W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஹூவாய் மேட் 70 ஏர் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அல்ட்ரா ஸ்லிம் மாடல்களை கொடுக்கின்றன. ஆனால், அவற்றில் 4500mAh பேட்டரி கேபாசிட்டி கூட எதிர்பார்க்க முடியாது. அதைவிட கம்மியாகவே கொடுக்கப்படும். அதே நேரத்தில் விலையிலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், இந்த ஹூவாய் மேட் 70 ஏர் அதிக கேபாசிட்டி மட்டுமல்லமால் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வந்துள்ளது.

ஹூவாய் மேட் 70 ஏர் அம்சங்கள் (HUAWEI Mate 70 Air Specifications): இந்த ஹூவாய் ஸ்மார்ட்போன் 6.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆனால், 208 கிராம் எடை கொடுக்கிறது. இந்த ஸ்லிம் பாடியில் 6500mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 66W சூப்பர் சார்ஜிங் (SuperCharge) மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது.
7 இன்ச் (2760 x 1320 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் P3 வைடு கலர் காமட் சப்போர்ட் கிடைக்கிறது. ஹர்மோனிஓஎஸ் 5.1 (HarmonyOS 5.1) கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிரின் 9020பி எஸ்ஓசி (Kirin 9020B SoC) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிரின் 9020ஏ எஸ்ஓசி (Kirin 9020A SoC) கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மாறுதலாக இருக்கலாம். இந்த ஹூவாய் மேட் 70 ஏர் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் மற்றும் டெலிபோட்டோவில் ஓஐஎஸ் (OIS) கிடைக்கிறது.
டெலிபோட்டோவில் மட்டும் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ், 4K வீடியோ ரெக்கார்டிங், எச்டிஆர் வீடியோ விவிட், ஏஐ டைனாமிக் போட்டோஸ் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 10.7 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,231ஆக இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.58,450ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.58,450ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,670ஆக இருக்கிறது. இது சீன மார்கெட் விலையாகும். அப்சிடியன் பிளாக், பெதர்ரெட் ஒயிட் கலர்களில் இருக்கிறது.
மேலும், கோல்டு & சில்வர் ப்ரொகேட் ஆகிய மூன்று கலர்களில் வருகிறது. சீன மார்கெட்டில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஹூவாய் மேட் 70 ஏர் ஸ்மார்ட்போனின் விலையை ஐபோன் ஏர் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் ஆகிய மாடல்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி விலைக்கு கிடைக்கிறது. ஸ்லிம் மட்டும் சில மிமீ மாறலாம்.


Click it and Unblock the Notifications








