12ஜிபி ரேம், 50MP கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்: ஹூவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ ப்ளஸ்!

|

ஹுவாய் மேட் 40 ப்ரோ மற்றும் மேட் 40 ப்ரோ+ ஸ்மார்ட்போன் 6.76 இன்ச் ஃப்ளெக்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2722 x 1344 பிக்சல் தீர்மானம், 50 எம்பி பிரைமரி கேமரா, 12ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது.

ஹுவாய் மேட் 40

ஹுவாய் மேட் 40

ஹுவாய் மேட் 40 அறிமுகப்படுத்தியதோடு நிறுவனம் ஹுவாய் மேட் 40 ப்ரோ மற்றும் மேட் 40 ப்ரோ+ ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பின்புற கேமரா அமைப்பைத் தவிர, இரு சாதனங்களும் ஒரே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஹுவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ+ விலை:

ஹுவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ+ விலை:

ஹுவாய் மேட் 40 ப்ரோவின் விலை 1,199 யூரோ (தோராயமாக ரூ.1,04,500), மேட் 40 ப்ரோ+ 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை 1,399 யூரோ (தோராயமாக ரூ.1,23,000) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

ஹுவாய் மேட் 40 ப்ரோ கருப்பு, வெள்ளை மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. மேட் 40 ப்ரோ+ செராமிக் வெள்ளை மற்றும் செராமிக் கருப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு

அதோடு ஹுவாய் நிறுவனம், சிறப்பு ஹுவாய் மேட் 40 ஆர்எஸ் பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹுவாய் மேட் 40 ஆர்எஸ் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்தின் விலை 2,295 யூரோ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!

ஹுவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ+ விவரக்குறிப்புகள்

ஹுவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ+ விவரக்குறிப்புகள்

ஹுவாய் மேட் 40 ப்ரோ மற்றும் மேட் 40 ப்ரோ+ ஸ்மார்ட்போன் 6.76 இன்ச் ஃப்ளெக்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே 2722 x 1344 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பாதுகாப்பு வசதிக்கென டிஸ்ப்ளேயின் கீழ் கைரேகை சென்சார் இருக்கிறது.

டிரிபிள் கேமரா அமைப்பு

டிரிபிள் கேமரா அமைப்பு

மேட் 40 ப்ரோ டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 50 எம்.பி பிரைமரி லென்ஸ், 20 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 12 எம்பி மூன்றாம் நிலை கேமராவைக் கொண்டுள்ளது.

பென்டா கேமரா அமைப்பு

பென்டா கேமரா அமைப்பு

மேட் 40 ப்ரோ+ ஒரு பென்டா கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50 எம்பி பிரைமரி லென்ஸ், 20 எம்பி இரண்டாம்நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 12 எம்பி டெலிபோட்டோ சென்சார் மற்றும் ஆப்டிகல் ஜூம் ரேஞ்ச் அமைப்பைக் கொண்டுள்ளது.

டூயல் செல்பி கேமரா அமைப்பு

டூயல் செல்பி கேமரா அமைப்பு

இரண்டு ஸ்மார்ட்போன்களும் டூயல் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 13 எம்பி முன்புற கேமரா மற்றும் 3டி டெப்த் சென்சிங் கேமரா ஆகியைவ பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 66 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4400 எம்ஏஎச் பேட்டரியும், 50 வாட்ஸ் வையர் லெஸ் சூப்பர் சார்ஜ் அம்சமும் இதில் இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei Mate 40 Pro, Huawei Mate 40 Pro+ Launched with 12Gb RAM, 50 MP Primary Lens Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X