50எம்பி கேமராவுடன் அசத்தலான ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹூவாய் நிறுவனம் தனது அட்டகாசமான ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போனை நேற்று நடைபெற்ற ஒரு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பின்பு மிஸ்டிக் சில்வர், வெள்ளை, கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் 2376 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் டிசிஐ-பி3, எச்டிஆர், 90Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kirin 9000 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஹூவாய் மேட் 40 சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது. பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், என்எப்சி, நாவிக், புளூடூத் 5.2, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஹூவாய் மேட் 40 சாதனத்தில் 4200எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 40 வாட் சூப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.78,400-ஆக உள்ளது. மேலும் ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனின் விற்பனை குறித்த தகவல் வெளிவரவில்லை, தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications