ஹுவாய் மேட் 20 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.! இங்க லைவ்வா பாக்கலாம்.!
ஹுவாய் நிறுவனம் இன்று காலை 11 மணி அளவில், நியூ டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனது புது மேட் சீரிஸ் ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.
ஹுவாய் நிறுவனம் இன்று காலை 11 மணி அளவில், நியூ டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனது புது மேட் சீரிஸ் ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஹுவாய் நிறுவனம் தனது ரசிகர்களுக்காக நேரலையும் செய்கிறது. நேரலையை இன்று 11 மணி முதல் இங்கே காணலாம்.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 3 கேமரா கொண்ட ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குவாட்ரண்ட் கேமரா
ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் 3 "குவாட்ரண்ட் கேமரா" சேவையுடனும், அதிவேக ஹிசிலிகோன் கிரீன் 980 சிப்செட்டுடனும் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புது ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் இல் நியூரல் பிராஸஸிங் யூனிட் மற்றும் ஏ.ஐ சேவையும் இணைக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் ஸ்மார்ட்போன்
குவாட்ரண்ட் கேமரா சேவையுடன் இந்த ஆண்டில் வெளிவரும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்மார்ட்போன் ஹுவாய் மேட் 20 ப்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியிடப்பட்ட ஹுவாய் மேட் பி20 ப்ரோ ஸ்மார்ட் போன் இன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

ஹுவாய் மேட் 20 ப்ரோவின் வேரியண்ட் விலை
ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.88,400 க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹுவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் இன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தளத்தில் ஹுவாய் மேட் 20 ப்ரோவின் விற்பனை விரைவில் துவங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ விபரக்குறிப்பு:
- 6.39' இன்ச் அளவுடன் கூடிய 3120x1440 பிக்சல் கொண்ட QHD+ OLED 19:5:9 விகித வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே
- ஹூவாய் ஹிசிலிகோன் கிரீன் 980 பிராசஸர்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு (எதிர்பார்க்கப்படுகிறது)
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி மெமரி கார்டு வசதி
- EMUI 9.0 இணக்கத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 40 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, f/1.8
- 20 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 24 மெகா பிக்சல் செல்பி கேமரா, f/2.0
- எல்.இ.டி பிளாஷ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3டி ஃபேஸ் அன்லாக்
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) தரசான்றிதழ் பெற்றது
- டூயல் ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்-இ
- வைஃபை
- ப்ளூடூத்
- 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்
- 4200 எம்.ஏ.எச். பேட்டரி
நிறம்: மிட்நைட் புளு, பிளாக் மற்றும் டுவிலைட்
விலை : ரூ..89,050


Click it and Unblock the Notifications