அக்டோபர் 16 : 5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹவாய் மேட் 10 ப்ரோ அறிமுகம்.!
அக்டோபர் 16ஆம் தேதி சீனாவில் நடைபெறும் நிகழ்சியில் இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மாட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம்.
வரும் அக்டோபர் 16ஆம் தேதி ஹவாய் மேட் 10 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹவாய் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன்வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.72,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.99-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2880) பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 18:9 என்ற திரை விகிதம் கொண்டுள்ளது இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ.

அக்டோபர் 16:
அக்டோபர் 16ஆம் தேதி சீனாவில் நடைபெறும் நிகழ்சியில் இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மாட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம்.

நினைவகம்:
இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64/128/256 மெமரி வித்தியாசத்தில் கிடைக்கும் எனதகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்:
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்டூயல் கேமரா வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications