விரைவில் : அட்டகாசமான ஹவாய் மேட் 10 (விலை & அம்சங்கள்).!
இக்கருவி 6.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ஹவாய் நிறுவனம் இந்த வருட இறுதியில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி அக்டோபர் மாதம் புதிய ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, ஸ்னாப்டிராகன் 835செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.6-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 6.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:
ஹவாய் மேட் 10 பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,148 எனக் கூறப்படுகிறது. அதன்பின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.48,039 எனக் கூறப்படுகிறது, மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,904 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
ஹவாய் மேட் 10 பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications