லீக்ஸ் அம்சங்கள் : ஹூவாய் மேட் 10, மேட் 10 ப்ரோ மற்றும் மேட் 10 லைட்.!

|

சமீபத்தில் முடிந்த ஐஎப்ஏ 2017 நிகழ்வில், ஹூவாய் நிறுவனம் அதன் கிரின் 970 எஸ்ஓசி-ஐ வெளியிட்டது. மேலும் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி அதன் மேட் 10 தொடர்வரிசைத் தொலைபேசிகளை வெளியிடபோவதாகவும் அறிவித்திருந்தது.

ஹூவாய் நிறுவனம் இந்த அறிவிப்பை செய்த போது, ​​மேட் 10 தொலைபேசிகள் பற்றி சில விடயங்களை மட்டுமே அறிந்துகொள்ள முடிந்தது. அதாவது, மேட் 10 மற்றும் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கிரின் 970 எஸ்ஓசி கொண்டு அறிமுகப்படுத்தப்படும் என்ற ஒரு திட்டவட்டமான விடயத்தை மட்டுமே அறிய முடிந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு, ​​பிரபலமான டிப்ஸர் ஆன இவான் பிளஸ் மேட் 10 ஸ்மார்ட்போன்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டுளார்.

மார்சல் மற்றும் பிளாங்க்

மார்சல் மற்றும் பிளாங்க்

இவான் பிளஸின் முந்தைய லீக்ஸ்படி, ஹுவை மேட் 10 ஆனது மார்சல் என்றும் மற்றும் மேட் 10 ப்ரோ ஆனது பிளாங்க் என்றும்குறியீட்டு பெயர் கொண்டுள்ளது என்பது வெளிப்படுத்தபட்டது. இன்னொரு அறிக்கையில், குறியீட்டு பெயர் ஆல்ப்ஸ் என்றொரு ஒரு சாதனம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேட் 10 மற்றும் 10 மேட் ப்ரோ

மேட் 10 மற்றும் 10 மேட் ப்ரோ

அந்த சாதனம் மேட் 10 லைட் ஆக இருக்கக்கூடுமென்று நம்பப்படுகிறது மற்றும் இக்கருவி மேட் 10 மற்றும் 10 மேட் ப்ரோ ஆகிய நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ள செயல்திறன்களைக் காட்டிலும் குறைந்த அளவிலான குறிப்புகள் கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

பிளான்ங் என்ற குறியீட்டு பெயர் கொண்டுள்ள மெட் 10 ப்ரோ அம்சங்களை பொறுத்தமட்டில், அக்கருவி க்யூஎச்டி1440 x 2880 பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 விகிதம் கொண்ட 5.99 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, கிரின் 970 எஸ்ஓசி, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/ 128 ஜிபி சேமிப்பு ஆகிய அம்சங்களை கொண்டு வெளியாகலாம்.

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு

கேமரா அம்சத்தை பொறுத்தமட்டில், முன்பக்கம் ஒரு 8 எம்பி செல்பீ கேமராவுடன் பின்பக்கம் இரட்டை பின்புற கேமரா அமைப்பு (12 எம்பி + 20 எம்பி) கொண்டு வரலாம். மேலும் இந்த சாதனம்எல்டிஇ கேட் 16 மாடல், ஐபி 68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு ஆகிய சான்றிதழ்களுடன் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி ஒன்றும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

மர்மமான சாதனமான ஆல்ப்ஸ் என்ற குறியீட்டு பெயரை கொண்டுள்ள மேட் 19 லைட் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவியில் 2550 x 1440 பிக்சல்கள் மற்றும் 16: 9 விகித விகிதம் கொண்ட 5.88 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் ஆகிய அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 16

அக்டோபர் 16

வெளியான புதிய அறிக்கைகளின்படி, மேட் 10 லைட் மற்றும் மேட் 10 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 16 அன்று தொடங்கப்பட்டு அதே மாதம் ஷிப்பிங்கை தொடங்கும். மற்றொருபுறம், உள்ள உயர் இறுதி ஸ்மார்ட்போன் ஆன மேட் 10 ப்ரோ ஆனது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷிப்பிங்கை தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவில் இயங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei Mate 10, Mate 10 Pro, Mate 10 Lite key specs revealed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X