நான்கு கேமராவுடன் ஹவாய் மேட் 10 லைட் அறிமுகம்.!
ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
ஹவாய் நிறுவனம் திங்களன்று ஹவாய் மேட் 10 மற்றும் ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து இப்போது ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது ஹவாய் நிறுவனம். மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக நான்கு கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ப்ரீஸ்டீஜ் கோல்ட், கிராஃபைட் பிளாக் மற்றும் அரோரா ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.30,500-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.9-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.9-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்
18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:
ஹவாய் மேட் 10 லைட் பொறுத்தவரை 1.7ஜிகாஹெர்ட்ஸ் ர்iளுடைiஉழn கிரின் 659 சிஸ்டம்-ஆன்-சிப் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3340எம்ஏஎச்:
ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications