Home
Mobile

கிராஃபிக்ஸ் டிசைனில் கலக்கும் ஸ்பெஷல் எடிசன் ஹுவெய் ஸ்மார்ட்போன்

By Super
கிராஃபிக்ஸ் டிசைனில் கலக்கும் ஸ்பெஷல் எடிசன் ஹுவெய் ஸ்மார்ட்போன்
அமெரிக்காவில் புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட்போனை ஹுவெய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே விற்பனையாகி கொண்டிருக்கும் எம்-835 என்ற ஸ்மார்ட்போனை ஸ்பெஷல் எடிசனாக வெளியிட்டுள்ளது ஹுவெய்.

அமெரிக்காவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான மெட்ரோ பிசிஸ் வழியாக புதிய ஸபெஷல் எடிசன் எம்-835 மொபைலை ஹுவெய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த மொபைலின் பின்பக்கத்தில் வரையப்பட்டுள்ள கிராபிக்ஸ் ஓவியம் கண்களை கவர்ந்திழுக்கிறது. இந்த டிசைனை டிசைனை டோக்கிடோக்கி நிறுவனம் வடிமைத்துள்ளது.

இந்த டிசைன் எம்-835 மொபைலுக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கும் வகையிலும், பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வகையிலும் உள்ளது. அதை வாடிக்கையாளர்களால் நிச்சயம் உணர முடியும். இந்த மொபைலின் பின்புறத்தில் போக்மேன் போன்ற டிராயிங் வரையப்பட்டுள்ளது.

அதோடு இந்த மொபைலின் சிறப்புகளும் இதில் சொல்லப்படுள்ளன. எம்-835 மொபைல் 2.8 கியூவிஜிஏ திரை வசதி கொண்டது. இது ஆன்ட்ராய்டு பிரையோ மூலம் இயங்கும் தன்மை கொண்டது.

துல்லியமான புகைப்படத்தையும், வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் கொடுப்பதற்காகவே இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக புளூடூத் 2.1 வசதியும், மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டும் உள்ளது. பயன்படுத்துவதற்கும், பாக்கெட்டில் வைத்துக் கொள்வதற்கும் மிகவும் வசதியான மொபைலாக இந்த எம்-835 ஸ்மார்ட்மொபைல் கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X