ஆண்ட்ராய்டு 7.0 உடன் வெளிவரும் புதிய ஹவாய் நோவா லைட்பிளஸ்.!
நோவா லைட்பிளஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
சீன நிறுவனமான ஹவாய் தற்சமயம் நோவா லைட்பிளஸ், ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் சீனாவில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த நோவா பிளஸ ஸ்மார்ட்போன், ஆணட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஃப்ரோஸ்ட், அர்ஜெண்டோ மற்றும் பிரெஸ்டீஜ் கோல்ட், வெள்ளை போன்ற வண்ண விருப்பங்களுடன் இந்த ஹவாய் நோவா லைட்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஹவாய் நோவா லைட்பிளஸ்.

ஆண்ட்ராய்டு 7.0:
நோவா லைட்பிளஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
நோவா லைட் பிளஸ் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications