Home
Mobile

வாடிக்கையாளர்களை மகிழ்விக்க களமிறங்கும் ஹுவெய் ஹானர்!

By Super
வாடிக்கையாளர்களை மகிழ்விக்க களமிறங்கும் ஹுவெய் ஹானர்!
ஹுவெய் ஹானர் என்ற பெயரில் புதிய மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது ஹுவெய் நிறுவனம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஹுவெய் புதிய புதிய தொழில் நுட்பங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஹுவெய் என்ற புதிய மொபைல் இந்திய சந்தைக்கு வர உள்ளது. இந்த ஹுவெய் ஹானர் போன் ஆன்ட்ராய்டு 2.3 பிளாட்ஃபார்ம் மூலம் இயங்குகிறது. இதில் 1.4 ஜிஎச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த மொபைல் 4 இஞ்ச் அகன்ற டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது.

ஆக்சிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், கிரையோ போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது 8 மெகா பிக்ஸல் கேமரா துல்லியத்தைக் கொடுக்கும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது. இந்த 8 மெகா பிகஸல் கேமராவின் மூலம் ஃபேஸ் டிடெக்ஷன், எச்டிஆர் போன்ற வசதிகளையும் நாம் பெற முடியும்.

2 மெகா பிக்ஸல் கேமராவும இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா வீடியோ சாட்டிங் மற்றும் கான்ஃபிரன்ஸிங் வசதிக்காக பயன்படுகிறது. இந்த கேமராவின் உதவி கொண்டு சோஷியல் நெட்வொர்கிலும் சாட்டிங் செய்ய முடியும். வேகமான நெட் வசதியினைப் பெற வைபை கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது அனைவரும் எதிர்பார்கின்ற 3ஜி காம்பாட்டிபிலிட்டி வசதியும் இதில் உள்ளது. 1,900 எம்ஏஎச் கொண்ட எல்ஐ-அயான் பேட்டரி இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பேட்டரி வழங்க முடியும். நிச்சயம் இந்த மொபைல் பார்ப்பவர்களை தன்வசம் கொண்டுவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய எதிர்பார்ப்பு கொண்ட ஹுவெய் ஹானர் மொபைல் இந்த ஆண்டின் இறுதி மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த போன் வெறும் ரூ.13,500 விலையில் கிடைக்கவிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X