பட்ஜெட் விலையில் நீடித்த பேட்டரி ஆயுள் தேவையா.? இதோ உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்.!

|

நேரம் பார்ப்பதில் இருந்து வாட்ஸ்ஆப் செய்துகொண்டே இருப்பது வரை ஸ்மார்ட்போனின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. நீண்ட நெடுநேர ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு, ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் எவ்வளவு முக்கியமானதொரு அம்சம் என்பதை நங் அறிவர். அதனாலேயே ஸ்மார்ட்போன் வாங்கும் போது பேட்டரித்திறன் மீது அதிக கவனம் செலுத்துவர்.

பட்ஜெட் விலையில் நீடித்த பேட்டரி ஆயுள் தேவையா.? இதோ பெஸ்ட் சாய்ஸ்.!

இந்த தேடலின் போது பெரும்பாலான கருவிகள் பெரிய அளவிலான பேட்டரித்திறன் கொண்டிருந்தாலும் இதர அம்சங்களில் சில குறைகளை கொண்டிப்பதை காண முடியும். ஆனால் அந்த குறையை ஹானர் ஹோலி 4 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் காண முடியாது. பேட்டரித்திறனில் வாய்பிளக்க இக்கருவி, அம்சங்களிலும் அதையே நிகழ்த்துகிறது.

5.5 இன்ச் எச்டி டிஸ்பிளே

5.5 இன்ச் எச்டி டிஸ்பிளே

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இந்தியாவில் அதன் ஹாலி 4 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம்அ செய்துள்ளது. ஒரு 2.5 டி கண்ணாடி வடிவமைப்பு உடனான 5.5 இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்டுள்ள இக்கருவி 8.2 மிமீ உலோக-பூச்சு உடையும் கொண்டுள்ளது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435

ஹோலி 4 பிளஸ் பின்புற கைரேகை ஸ்கேனர் ஒன்றை ஆதரிக்கிறது. ஒரு 64-பிட் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் ஆண்ட்ராய்டு 7.0 அடிப்படையிலான இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்குகிறது.

4000எம்ஏஎச்

4000எம்ஏஎச்

இந்த சாதனம் ஒரு 4000எம்ஏஎச் என்ற பாரிய பேட்டரித்திறனை தன்னுள் பொதித்துள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ளது.

சுப்ரீம் ஸ்பீட் போகஸ்

சுப்ரீம் ஸ்பீட் போகஸ்

ஹானர் ஹோலி 4 பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 1.25 மைக்ரோமீட்டர் சென்சார் கொண்ட 12எம்பி பின்புற கேமராவும், 8எம்பி முன்பக்க கெமர் ஒன்றையும் கொண்டுள்ளது. இதன் செல்பீ கேமராவானது பியூட்டி மோட் மற்றும் 0.3 விநாடிகள் என்ற சுப்ரீம் ஸ்பீட் போகஸ் ஆகிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

3.5 மிமீ ஹேண்ட்-ஃப்ரீ ஹெட்செட்

3.5 மிமீ ஹேண்ட்-ஃப்ரீ ஹெட்செட்

மறுபக்கம் இதன் கேமரா ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் மற்றும் பிஆர்ஓ முறைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது. இந்த சாதனம் ஒரு 5வி / 2ஏ சார்ஜர், ஒரு 3.5 மிமீ ஹேண்ட்-ஃப்ரீ ஹெட்செட் மற்றும் தரநிலை யூஎஸ்பி-ஏ டூ மைக்ரோ யூஎஸ்பி ஆகியவைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

12 மாத சேவை உத்தரவாதம்

12 மாத சேவை உத்தரவாதம்

சாம்பல், தங்கம் மற்றும் வெள்ளி - ஆகிய மூன்று வண்ண மாதிரிகளில் கிடைக்கும் ஹானர் ஹோலி 4 பிளஸ் ஆனது ரூ.13,999/- என்ற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஹானர் பங்குதாரர் கடைகள் மூலம் வாங்க கிடைக்கும்கௌ என்பதும் ஹோலி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நிலையான 12 மாத சேவை உத்தரவாதத்துடன் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Huawei, Launch, Honor Holly 4 Plus, For Rs 14000, Specs, Smartphone, Technology, News, ஹூவாய், ஹானர், ஸ்மார்ட்போன், அம்சங்கள், தொழில்நுட்பம், இந்தியா, செய்திகள்

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X