ஹுவெய் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

Posted By: Staff
ஹுவெய் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
புதிய ஸ்மார்ட்போந்களை வழங்குவதாக பல நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களும் புதிய ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

அசன்டு ஒய்-200, அசன்டு ஜி-300 என்ற ஸ்மார்ட்போன்களை ஹுவெய் நிறுவனம் அறிமுகம் செய்வதாக ஒரு செய்தி நமது கிஸ்பாட்டில் ஜூலை 21ம் தேதி வெளியானது. அந்த 2 ஸ்மார்ட்போன்களையும் ஹுவெய் வெளியிட்டுள்ளது.

ஒய்-200 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான இயக்கத்தினை பெற 800 மெகாஹெர்ட்ஸ் கொண்ட கியூவல்காம் எம்எஸ்எம்7225ஏ ஸ்னாப்டிராகன் கார்டெக்ஸ்-ஏ-5 பிராசஸர் வசதியினை வழங்கும்.

இதன் அட்ரினா 200 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினையும் இதில் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 3.15 மெகா பிக்ஸல் கேமராவும் உளளது. அழகான மற்றும் துல்லியமான புகைப்படத்தினை வழங்க இந்த ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும். 3.5 இஞ்ச் திரை வசதியினால் பிரண்மாண்ட தோற்றத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் தொடுதிரை வசதியினை அளிக்கும்.

இன்டர்நெட் வசதிக்காக கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வைபை வசதிக்கும் சப்போர்ட் செய்யும். இதில் இருக்கும் 1,250 எம்ஏஎச்

பேட்டரி வசதி, தொழில் நுட்பங்களை நீண்ட நேரம் பயன்படுத்த நீடித்து உழைக்கும்.

அசன்டு ஜி-300 ஸ்மார்ட்போன், ஒய்-200 ஸ்மார்ட்போனை விட சற்ற பெரிய திரையை கொடுக்கும். இதன் கேமராவின் அதிக பிக்ஸல் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவினால் நிச்சசயம் துல்லியமாக புகைப்படம் கிடைக்கும் என்று நம்பலாம். ஹுவெய் ஒய்-200 ஸ்மார்ட்போன் ரூ. 8,190 விலையிலும், ஜி-300 ஸ்மார்ட்போன் ரூ. 13,490 விலையிலும் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்