எல்டிஇ வசதியுடன் வரும் புதிய ஹூவெய் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
எல்டிஇ வசதியுடன் வரும் புதிய ஹூவெய் ஸ்மார்ட்போன்!
பல ஸ்மார்போன்களையும் மின்னணு சாதனங்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து மகிழ்வித்த ஹுவெய் நிறுவனம், புதிதாக அசன்டு பி-1 எல்டிஇ என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

புத்தம் புதிய இந்த ஸ்மார்ட்போனின் சில தொழில் நுட்ப வசதிகளின் விவரங்களையும் பார்க்கலாம். இதில் 4.3 இஞ்ச் அமோலெட் திரை வசதியில் அனைவரையும் இந்த ஸ்மார்ட்போன் எளிதில் கவர்ந்துவிடும். இதில் 960 X 540 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுப்பதோடு, டியூவல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸரையும் இந்த

ஸ்மார்ட்போன் வழங்கும். இந்த பிராசஸர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும்.

இதன் அதி வேகம் கொண்ட பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்க உதவும். இதில் 4ஜிபி இன்டர்னல் மெமரி மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வசிதயையும் பயன்படுத்தலாம். 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டு இதில் அழகான தருணங்களை சிறப்பான புகைப்படமாக உருமாற்றலாம். சில ஸ்மார்ட்போன்களில் வீடியோ காலிங் வசதி இல்லாமல் போவது வாடிக்கையாளர்களுக்கு சிறிய ஏமாற்றத்தினை வழங்கலாம்.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் எளிதாக பெறலாம். குறிப்பாக சொல்ல வேண்டியது, இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அளிக்கும். 1,800 எம்ஏஎச் பேட்டரி வசதி கொடுக்கும் ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போன் சிறப்பாக நீண்ட நேரம் நீடித்து உழைக்கும் என்றும் நம்பலாம்.

வைபை நெட்வொர்க் வசதி இருப்பதினால், இன்டர்நெட் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 4ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், தகவல்களை எளிதாக ஸ்டோர் செய்து கொள்ள முடியும். இதன் விலை விவரங்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரவில் இந்த

ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பங்கள் வெளியாகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot