Home
Mobile

இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்போன்: வெளியிடப்போவது யார்.? என்ன வேகம்.? எவ்வளவு விலை.?

அந்த 5ஜி ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

சீன ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் கியர் தயாரிப்பாளரான ஹூவாய், 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அந்த 5ஜி ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்போன்: வெளியிடப்போவது யார்.? எவ்வளவு விலை.?

சென்ஸேனில் நடந்த நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான தனது திட்டங்களை நிறுவனம் வெளிப்படுத்தும் ஹூவாய் உலகளாவிய ஆய்வாளர் உச்சிமாநாடு 2018-ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் இந்த முயற்சி, 5ஜி தொலைத்தொடர்பு துறையின் அடுத்தகாட்ட வளர்ச்சியாகவும் மற்றும் ஒரு மிகப்பெரிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

கூறப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது..

கூறப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது..

கூறப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்த கூடுதல் தகவல்கள் ஆனது அடுத்த வருடத்தில் வெளியாகும் என்றும், அதன் வழியாக இதர நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன் உற்பத்தி சார்ந்த ஊக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் மேட் 20 ஆனது 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வெளியாகும் என்கிற நிலைப்பாடு உள்ளதால், கூறப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஹூவாய் மேட் 30 ஆக இருக்கவும், அதுவொரு 5ஜி மோடம் கொண்டிருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

2.3 Gbps என்கிற அளவிலான டவுன்லிக் வேகம்.!

2.3 Gbps என்கிற அளவிலான டவுன்லிக் வேகம்.!

ஹூவாய் நிறுவனம், அதன் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட, ஹூவாய் 5ஜி மோடம்களை தயாரிப்பதை உறுதி செய்துள்ளது. சமீபத்தில் முடிவுற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில், ஹவாய், அதன் 5ஜி மோடம், Balong 5G01 சிப் ஆகியவற்றை அறிவித்தது. இந்த 5ஜி மோடம் ஆனது ஒரு 2.3 Gbps என்கிற அளவிலான டவுன்லிக் வேகத்தை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 2025-க்குள் 1.1 பில்லியன் 5ஜி இணைப்புகள்.!

வருகிற 2025-க்குள் 1.1 பில்லியன் 5ஜி இணைப்புகள்.!

மறுகையில் அறிவிக்கப்பட்ட Balong 5G01 சிப் ஆனது ஸ்மார்ட்போன்களுக்குப் பொருந்தாது, அதற்கு பதிலாக, ஹூவாய் தனது சொந்த வாகனம் மற்றும் பிற ஐஓடி தயாரிப்புகளில் அதை பயன்படுத்தும். ஹூவாய் நிறுவனத்தின் படி, வருகிற 2025-க்குள் 1.1 பில்லியன் 5ஜி இணைப்புகளும் மற்றும் 200 மில்லியன் அளவிலான 5ஜி மூலம் இணைக்கப்பெற்ற கனெக்டெட் கார்களும் இருக்கும்.

பார்தி ஏர்டெல் உதவும்; எதற்கு.?

பார்தி ஏர்டெல் உதவும்; எதற்கு.?

ஹூவாய் ஒரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல, எரிக்சன், நோக்கியா மற்றும் ZTE ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் ஒரு மிகப்பெரிய டெலிகாம் கியர் தயாரிப்பாளரும் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை, ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி கனவை நிஜமாக்க இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உதவும். டெல்லியில், ஹவாய் மற்றும் ஏர்டெல் கூட்டணி ஏற்கனவே 5ஜி இணைப்புகளை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
விலை நிர்ணயம் அதிகமாக இருக்கும்.!

விலை நிர்ணயம் அதிகமாக இருக்கும்.!

கவுன்டர்பார்ட் நிறுவனத்தில் இருந்து வந்த சமீபத்திய அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 110 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சிப்களின் விலை புள்ளி அதிகமாக இருக்கும் என்பதால் 5ஜி திறன் ஆனது ஆரம்பத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இணைக்கப்படும். அதாவது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். சீனா, யுனைட்டட் ஸ்டேட்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பல தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் ஏற்கனவே 5 ஜி நெட்வொர்க்கை சோதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei to Launch its First 5G Smartphone in Q3 2019. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X