அக்டோபர் 5 : டூயல் ரியர் கேமராவுடன் ஹூவாய் ஹானர் 9 அறிமுகம்.!
ஹானர் 9 பொறுத்தவரை ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் சீனாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 9 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.25,570/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.28,419/- என்ற விலைக்கும் சந்தையை அடையலாம்.
இந்த ஹூவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஹூவாய் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பல தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கிளேசியர் கிரே, சஃபையர் புளூ, மிட்நைட் பிளாக், கோல்டு, புளூ பேர்டு, ராபின் எக் புளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5.15-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.15-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
ஹானர் 9 பொறுத்தவரை ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஹானர் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3200எம்ஏஎச்:
ஹானர் 9 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications