6ஜிபி ரேம், டூவல் கேமரா கொண்ட ஹூவாய் ஹானர் வி9.!
இக்கருவியின் வெளியீடானது இந்த ஆண்டு நிகழும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்விற்கு ஒரு வாரம் முன்பாக நிகழும்.
ஒரு புதிய ஹூவாய் அக்கருவி இந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று உத்தியோகபூர்வ வெளியிடப்படவுள்ளது. அதனை ஒரு டீஸர் புகைப்படம் வழியாக சீன நிறுவனமான ஹூவாய் அறிவித்துள்ளது. அதாவது இக்கருவியின் வெளியீடானது இந்த ஆண்டு நிகழும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்விற்கு ஒரு வாரம் முன்பாக நிகழும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த சாதனம் அக்டா கோர் 2.4ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சேமிப்பு விருப்பங்களை பொறுத்தவரை 64ஜிபி மற்றும் 128ஜிபி கொண்ட 4ஜிபி மற்றும் 6ஜிபி மாறுபாடுகளில் கிடைக்கும்.
கேமரா துறையை பொறுத்தம்மட்டில் ஹானர் வி9 கருவியானது 12எம்பி + 2எம்பி என்ற ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பும் மற்றும் ஒரு 8எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. அளவீடுகளில் 157 × 77.5 × 6.97மிமீ மற்றும் 184 கிராம் எடையும் கொண்டுள்ள இக்கருவி 3,900எம்ஏஎச் பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும். இக்கருவி ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : யூட்யூப்க்கு மாற்றான சில வீடியோ தளங்கள்.!


Click it and Unblock the Notifications