Home
Mobile

ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் செய்யும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!

By Super

ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் செய்யும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!
தனது ஹானர் என்ற ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யும் வசதியினை வழங்குகிறது.

ஆன்ட்ராய்டு வி2.3.5 ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் மூலம் இயங்கி கொண்டிருந்த இந்த ஸ்மார்ட்போனில், இப்பொழுது ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி நிச்சயம் ஹுவெய் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை பெரிதும் தூண்டும்.

ஹுவெய் நிறுவனம் ஏற்கனவே ஆர்ஓஎம் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சீனாவின் வெப்சைட் ஒன்றில் அப்லோட் செய்திருந்தது. நிறைய வாடிக்கையாளர்கள் ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்து ஐஸ்கிரீம் சேன்ட்விச் இயங்குதளத்திற்கு மாற விரும்புகின்றனர்.

ஹானர் ஸ்மார்ட்போன் அளித்திருக்கும் இந்த ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் வசதி அனைவரையும் பிரம்மிக்க வைத்திருக்கிறது. இந்த வசதியினை வலைத்தளத்தில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஹானர் ஸ்மார்ட்போனில் எஃப்டபிள்யூவிஜிஏ 4 இஞ்ச் டிஎப்டி மல்டி டச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கும். இந்த ஸ்மாரட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்கார்பியன் சிபியு பொருத்துப்பட்டுள்ளது. கியூவல்காம் எம்எஸ்எம்8255டி ஸ்னாப்டிராகன் சிப்செட்டும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் உயர்ந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் செயல்பாட்டின் மூலம் உணர முடியும். 8 மெகா பிக்ஸல் கேமராவில் உள்ள ஆட்டோ ஃபோக்கஸ், லெட் ஃப்ளாஷ் வசதிகளின் மூலமாக சிறந்த புகைப்படத்தை மிக சிறந்த புகைப்படமாக வழங்கும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்கள் இதில் உள்ளது. ஏற்கனவே சிறந்த தொழில் நுட்பங்களை தந்து கொண்டிருந்த ஹுவெய் ஹானர் ஸ்மார்ட்போன், ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் அப்டேட் வசதியினால் அதி நவீன தொழில் நுட்பங்களை அள்ளி வழங்கப்போகிறது. இன்னும் சில அற்புதமான புதிய அப்டேஷன் வசதிகள் ஹுவெய் நிறுவனத்திடம் இருந்து எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X