இந்தியாவில் புதிய கருவிகளை அறிமுகம் செய்த ஹானர் விரிவான தகவல்கள்

Written By:

புது தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் ஹுவாய் நிறுவனம் ஹானர் பிரான்டில் தனது புதிய கருவியினை அறிமுகம் செய்தது. அதன் படி ஹானர் 8 கருவியுடன் ஹானர் 8 ஸ்மார்ட் மற்றும் ஹால்லி 3 ஸ்மார்ட்போன் கருவிகளையும் அறிமுகம் செய்தது.

ஹானர் 8 கருவியானது ரூ.29,999 மற்றும் ஹானர் 8 ஸ்மார்ட் மற்றும் ஹால்லி 3 கருவிகள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கருவிகளும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஹானர் இணையதளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் புதிய கருவியில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பின்வருமாறு..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டூயல் கேமரா

டூயல் கேமரா

ஹூவாய் நிறுவனத்தின் முந்தைய கருவியான பி9 டூயல் கேமரா செட்டப் கொண்டிருந்தது, இதன் விலை ரூ.40,000 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஹானர் 8 கருவியிலும் டூயல் கேமரா செட்டப் மற்றும் ரூ.10,000 குறைவாக இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

ஹானர் 8 கருவியில் 5.2 இன்ச் ஃபுல் எச்டி LTPS LCD டிஸ்ப்ளே மற்றும் 423ppi கொண்டுள்ளது. பிரகாசமான டிஸ்ப்ளே, மற்றும் கண்களை பாதுகாக்கும் ஐ கேர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கண்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

வன்பொருள்

வன்பொருள்

ஹானர் 8 கருவியானது ஆக்டா கோர் கிரின் 950 சிப்செட் Mali-T880 GPU, 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஹானர் 8 கருவியில் கைரேகை ஸ்கேனர் மற்றும் லெவல் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ஹானர் 8 கருவியில் ஸ்மார்ட் டூயல் ஆன்டெனா ஸ்விட்சிங், வை-பை 3.0 டூயல் பேண்ட் ஸ்விட்சிங் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹானர் 8 ஸ்மார்ட்

ஹானர் 8 ஸ்மார்ட்

ஹானர் 8 ஸ்மார்ட் கருவியில் 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கிரின் 650 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹானர் ஹால்லி 3

ஹானர் ஹால்லி 3

இரண்டு கருவிகளுடன் ஹானர் நிறுவனம் ஹால்லி 3 எனும் மற்றொரு கருவியையும் அறிமுகம் செய்துள்லது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் ஹானர் ஸ்மார்ட்போன் என்பதோடு இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. EMUI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ, கிரின் 620 சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 3100 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ஹானர் 8 ரூ.29,999 என்ற விலையில் மூன்று நிறங்களில் கிடைக்கின்றது. ஹானர் 8 ஸ்மார்ட் மற்றும் ஹால்லி 3 கருவிகள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஹானர் ஆன்லைன் விற்பனை தளத்திலும் கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Huawei Honor 8, Honor 8 Smart, Holly 3 Launched in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்