Subscribe to Gizbot

சியோமி ரெட்மீ நோட் 4 VS ஹானர் 6எக்ஸ் - நேரடி மோதல், எது வெல்லும்?

Written By:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2ஜிபி ரேம் மற்றும் 8எம்பி கேமரா கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது என்பது ஒரு முட்டாள்தனமான காரியமாக பார்க்கப்பட்டது. அந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது ஹூவாய், சியோமி, கூல்பேட், லீஈகோ, லெனோவா போன்ற சீன ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் படையெடுப்பின் மூலம் இந்த காலம் அடியோடு மாற்றப்பட்டு விட்டது. இப்போது நாம் கிட்டத்தட்டஅனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரூ.15,000/-க்குள் வாங்க முடியும்.

அனைத்து அம்சங்கள் கொண்ட அத்தகைய பட்ஜெட் அக்கருவிகளை தொடர்ந்து பாராட்டத்தக்க வண்ணம் வெளியிடம் சியோமி மற்றும் ஹூவாய் நிறுவனத்திற்கும் தான் இப்போது ஒரு நேரடி போட்டி நடக்கவுள்ளது. அதாவது ஹூவாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஹானர் 6 எக்ஸ் கருவிக்கும் அதே மாதிரியான விலை நிர்ணயம் கொண்ட சிரோமியோ ரெட்மீ நோட் 4 கருவிக்கும் ஒரு ஒப்பீடு யுத்தம் நடத்தவுள்ளோம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

ஹானர் 6எக்ஸ் மற்றும் சியோமி ரெட்மீ நோட் 4 கருவிகளானது உலோக உடல் வடிவமைப்பு கொண்டு கிட்டத்தட்ட பார்க்க்க ஒன்றுபோல் தான் உள்ளன. பொத்தான்கள் கூட இரண்டு போன்களிலும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஹானர் 6எக்ஸ் கருவியின் முன்பக்கம் ஹானர் பிராண்ட் பெயர் பொறிக்கப்பட்ருக்கும் என்பது தான்.

மிஞ்சும் ஒரு அம்சம்

மிஞ்சும் ஒரு அம்சம்

6எக்ஸ் கருவியில் ஒரு இரட்டை பின்பக்க கேமரா இருக்கிறது மறுபக்கம் நோட் 4 கருவியிலோ ஒரு முதன்மை கேமரா தொகுதி மட்டுமே உள்ளது. கைரேகை சென்சார் என்று பார்க்கும் போது இரு தொலைபேசிகளிலும் கேமரா தொகுதிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஹானர் 6எக்ஸ் 0.3 விநாடிகளுக்குள் தொலைபேசியை திறக்கும் என்பது ரெட்மீ நோட் 4 கருவியை மிஞ்சும் ஒரு அம்சம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கணிசமான உணர்வு

கணிசமான உணர்வு

டிஸ்ப்ளே அடிப்படையில் இரண்டு கருவிகளும் 5.5 அங்குலம் மற்றும் 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்டுள்ளது ஆனால் ரெட்மீயுடன் ஒப்பீடும் போது ஹானர் 6எக்ஸ் (162 கிராம் எடை) கைகளில் கணிசமான உணர்வை அளிக்கிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன்

க்வால்காம் ஸ்னாப்டிராகன்

ஹானர் 6எக்ஸ் கருவி அந்நிறுவனத்தின் ஹிசிலிகான் கிரின் 655 எஸ்ஓசி உடனான 3ஜிபி/ 4ஜிபி ரேம் இணைந்து வருகிறது. மறுபுறம், ரெட்மீ அதற்கு சமமாக சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடனான 2ஜிபி /3ஜி /4ஜிபி ரேம் இணைந்து வருகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஹானர் 6எக்ஸ் கருவி ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான இஎம்யூஐ 4.1 மூலம் இயங்குகிறது மற்றும் 2017-ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட் நிகழும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது மறுபக்கம் ரெட்மீ நோட் 4 கருவி பெட்டிக்கு வெளியே எம்ஐயூஐ 8 மூலம் இயங்குகிறது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் முன்பு கூறியது போல ஹானர் 6எக்ஸ் 12MP மற்றும் 2எம்பி சென்சார் கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. ரெட்மீ நோட் 4 கருவியானது இந்த விடயத்தில் 6எக்ஸ் கருவியுடன் போட்டிக்கு பொருந்தவில்லை. இக்கருவி ஒரு 13எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது., ஹானர் 6எக்ஸ் கருவியோ 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

சியோமி ரெட்மீ நோட் 4 கருவி ஒரு 4100எம்ஏச் பேட்டரி திறன் கொண்டுருக்க, ஹானர் 6எக்ஸ் 3340எம்ஏஎச் பேட்டரி திறனை வழங்குகிறது. இரண்டு சாதனங்களையும் ஒப்பிட்டு பார்த்த பின்னர், ரெட்மீ நோட் 4 கருவியானது வடிவமைப்பு, வன்பொருள் மற்றும் பயனர் இடைமுகம் ஆகிய தனித்திறன்களில் 6எக்ஸ் அக்கருவியை விட சற்று பின்தங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

முடிவு

முடிவு

மேலும், ஹானர் 6எக்ஸ் கருவியில் எந்த வெப்பமூட்டும் பிரச்சினைகளும் எழுந்ததில்லை உடன் தீவிரமான கிராஃபிக் பணிகளை கையாளும் திறனும் 6எக்ஸ் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் ஒரு ஒழுக்கமான வடிவமைப்பு, அதிக அளவிலான எம்பி கேமரா மற்றும் எந்தவிதமான 'லேக்' அனுபவமும் தராத ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்றால் ஹானர் 6எக்ஸ் தான் ஒரு வெளிப்படையான தேர்வாக இருக்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.15,000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்லிம் ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Huawei Honor 6X vs Xiaomi Redmi Note 4: the battle for the best budget phone. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot