டூவல் பேண்ட் சப்போர்ட் செய்யும் இலகு எடைகொண்ட ஹுவெய் போன்

Posted By: Staff

டூவல் பேண்ட் சப்போர்ட் செய்யும் இலகு எடைகொண்ட ஹுவெய் போன்
மக்களின் விருப்பத்தைத் தன் விருப்பமாகக் கொண்டு அதன் அடிப்படையில் படைப்புகளை அதிகரித்துக்கொண்டே போகிறது ஹுவெய் நிறுவனம். ஹுவெய் யூ-8180 என்ற மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது ஹுவெய் நிறுவனம்.

இது கூகுள் ஆன்ட்ராய்டு வி2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த மொபைலில் 2.8 இஞ்ச் கியூவிஜிஏ கெப்பாசிட்டிவ் திரை கொடுக்கப்பட்டுள்ளது. 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் கொடுக்கிறது. இது கியூவர்டிக் கீப்பேட் வசதி கொண்டது.

ஹுவெய் யூ-8180 மொபைல் 3.2 மெகா பிக்ஸல் கேமரா வசதியையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் வெறும் 100 கிராம் எடை கொண்டது. ஏ2டிபி வி2.0 புளூடூத் வசதியின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த மொபைல் 3ஜி வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது.

இதில் யூஎஸ்பி போர்ட், வைபை, ஜிபிஆர்எஸ், டபிள்யூஏபி பிரவுசர், 3.5 மிமீ ஆடியோ ஜேக், 256 எம்பி ரேம், 512 எம்பி ஃப்ளாஷ் ஸ்டோரேஜ் போன்ற வசதிகளும் இதில் உள்ளது. 16 ஜிபி வரை இதன் மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் செய்கிறது.

இந்த போனில் மீடியா பிளேயர் வசதியும் உள்ளது. இந்த மொபைல் டியூவல் பேண்ட் யூடிஎம்எஸ் மற்றும் குவேட் பேண்ட் ஜிஎஸ்எம் வசதியும் கொண்டுள்ளது. ஹிவெய் காகா யூ-8180 மொபைல் ரூ.9,000 விலை கொண்டது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்