இலகு எடையில் ஹுவெய் வழங்கும் புதிய மொபைல்

Posted By: Staff
இலகு எடையில் ஹுவெய் வழங்கும் புதிய மொபைல்
வயர்லெஸ் இன்டர்நெட் மோடம் மற்றும் மொபைல் போன்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது ஹுவெய் நிறுவனம்.

ஜி-7300 என்ற பெயரில் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் 3.5 இஞ்ச் அகன்ற தொடுதிரை டிஎப்டி எச்விஜிஏ தொழில் நுட்பத்தினை வழங்கும்.

256கே கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் திறம் படைத்தது. 110 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் டிஜிட்டல் வசதியியுள்ள 3.2 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்குகிறது. இதனால் அழகான புகைப்படங்களை எடுக்கலாம்.

ஜி-7300 மொபைலில் 1,300 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி உள்ளதால் அதிக நேரம் நீடித்து உழைக்கும்.

312 மெகா ஹெர்ட்ஸ் பிராசஸரும், எம்டிகே 6236 சிப் செட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், மல்டி டாஸ்க்கிங் பணிகளில் இந்த மொபைல் அதிவேகத்தை காட்டுகிறது.

ஹுவெய் நிறுவனத்தின் இந்த புதிய மொபைலின் மூலம் டிவிட்டர், ஃபேஸ்புக், ஜி-டாக் போன்ற நெட்  தொடர்புகளை எளிதில் ஏற்படுத்தி கொள்ளலாம்.

40 எம்பி வரை இன்டர்னல் மெமரியையும் பெறலாம். 16ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வசதியையும் கொண்டுள்ளது.

அனைவரின் மனதையும் களவுபோக செய்யும் இந்த புதிய ஹுவெய் ஜி-7300 மொபைலின் விலை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்