லேசா..லேசா... 75 கிராமில் ஓர் புதிய மொபைல்!

இந்த புதிய மொபைல் வெறும் 75 கிராம் எடையை கொண்டுள்ளது. இது கருப்பு மற்றும் சில்வர் கலந்த வண்ணத்தில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஜி-7005 மொபைல் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. 2.4 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட் மொபைல் 2ஜி தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்கிறது. டிஎப்டி மற்றும் எல்சிடி டச் ஸ்கிரீன் வசதியை கொண்ட இந்த மொபைல், 240 x 320 திரை துல்லியத்தை வழங்கும்.
1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தையும், தெளிவான வீடியோவையும் தரும். 2.1 வெர்ஷன் புளூடூத் தொழில் நுட்பத்தினை கொடுக்கும்.
இந்த ஜி-7005 மொபைலினால் ஜிபிஆர்எஸ் மற்றும் யூஎஸ்பி போர்ட் வசதியினால், தகவல்களை எளிதாக பரிமாறவும், பதிவேற்றமும் செய்து கொள்ளலாம்.
வீடியோ, மியூசிக் ப்ளேயர், எப்எம் ரேடியோ போன்ற வசதிகளை இந்த மொபைல் சப்போர்ட் செய்யும்.
ஹுவெய் ஜி-7005 மொபைலின் விலை இன்னும் வெளியிடப்பட வில்லை. ஆனால் இந்த மொபைல் ரூ.9,000 விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
