மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.!
ஹூவாய் என்ஜாய் 9எஸ ஸ்மார்ட்போன் பொதுவாக 24எம்பி +16எம்பி + 2எம்பி என மூன்று ரியர் கேமரா ஆதரவுகளை கொண்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது ஹூவாய் என்ஜாய் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக ஹூவாய் என்ஜாய் 9எஸ் சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் என்ஜாய் 9எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே அம்சம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளது மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:
ஹூவாய் என்ஜாய் 9எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

சிப்செட்:
ஹூவாய் என்ஜாய் 9எஸ் சாதனம் ஆக்டோ-கோர் கிரிண் 710 மற்றும் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-73 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாதனம்.

கேமரா:
ஹூவாய் என்ஜாய் 9எஸ ஸ்மார்ட்போன் பொதுவாக 24எம்பி +16எம்பி + 2எம்பி என மூன்று ரியர் கேமரா ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் போன்றவை
இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications