Home
Mobile

ரூ.13,455/-க்கு 18:9 டிஸ்பிளே; டூயல் கேம்; ஆண்ட்ராய்டு ஓரியோ; வேறென்ன வேணும்?

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் தோராயமாக ரூ.13,455 (3ஜிபி ரேம்) மற்றும் ரூ.15,527 (4ஜிபி ரேம்) என்கிற புள்ளியை பெறலாம்.

By Muthuraj

ஹூவாய் நிறுவனம், இன்று சீனாவில் அதன் ஹூவாய் என்ஜாய் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. வெளியான ஹூவாய் 8 என்ஜாய் ஆனது மொத்தம் இரண்டு சேமிப்பு வகைகளில், அதாவது 3 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் தோராயமாக ரூ.13,455 (3ஜிபி ரேம்) மற்றும் ரூ.15,527 (4ஜிபி ரேம்) என்கிற புள்ளியை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் தங்கம், கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம்

3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம்

அம்சங்களை பொறுத்தவரை, ஹூவாய் 8 என்ஜாய் ஆனது, 1440 x 720 பிக்சல் அளவிலான ஒரு 5.99 அங்குல டிஎஃப்டி எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதன் திரை விகித 18: 9 என்பதும் குறிப்பிடத்தக்கது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி உடனான 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அல்லது 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ ஈட்டி கார்ட் வழியாக 256 ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

13 மெகாபிக்சல் +2 மெகாபிக்சல்

13 மெகாபிக்சல் +2 மெகாபிக்சல்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் +2 மெகாபிக்சல் அளவிலான டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
பேஸ் அன்லாக் ஆதரவு

பேஸ் அன்லாக் ஆதரவு

செல்பீக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்கான் ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், பிங்கர் பிரிண்ட் சென்சார் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஒரு 3.5 மிமீ ஹெட்ஜாக், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில், 158.3 x 76.7 x 7.8 மிமீ மற்றும் 155 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 8 launched with 18:9 Display and Android Oreo. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X