ஹூவாய் என்ஜாய் 8, என்ஜாய் 8 பிளஸ், என்ஜாய் 8இ அறிமுகம்.!
ஹூவாய் 8 என்ஜாய் ஆனது, 1440 x 720 பிக்சல் அளவிலான ஒரு 5.99 அங்குல டிஎஃப்டி எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதன் திரை விகித 18: 9 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் ஹூவாய் நிறுவனம் என்ஜாய் 8, என்ஜாய் 8 பிளஸ், என்ஜாய் 8 இ போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்கள். குறிப்பாக டூயல்-சிம், டூயல்-கேமரா ஆதரவுகளுடன் இந்த ஹூவாய் ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது.

ஹூவாய் 8 என்ஜாய் ஆனது, 1440 x 720 பிக்சல் அளவிலான ஒரு 5.99 அங்குல டிஎஃப்டி எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதன் திரை விகித 18: 9 என்பதும் குறிப்பிடத்தக்கது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி உடனான 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அல்லது 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ ஈட்டி கார்ட் வழியாக 256 ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் +2 மெகாபிக்சல் அளவிலான டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் முறையே ரூ.13,500 மற்றும் 15,500- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.93-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080x2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம். அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 2.36ஜிகாஹெர்ட்ஸ் கிரிண் 659 ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா அமைப்பு மற்றும் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 64ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி முறையே ரூ.17,600 மற்றும் ரூ.19,700 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 8இ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.70-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 720x1440 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம். அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 11,400-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications