ஆண்ட்ராய்டு நௌகட் & ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஒசி உடன் வெளிவரும் ஹவாய் என்ஜாய் 7.!
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1280-720) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை.!
ஹவாய் நிறுவனம் தற்போது தற்போது சீனாவில் ஆண்ட்ராய்டு நௌகட் மற்றும் ஸ்னாப்டிராகன் 425 போன்ற பல செயல்திறன்கள் கொண்ட ஹவாய் என்ஜாய் 7 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது பல்வேறு இணைப்பு சதானங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளன, மொபைல் சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1280-720) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைஇதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

13மெகாபிக்சல்:
ஹவாய் என்ஜாய் 7 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல்
கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

3ஜிபி ரேம்;
இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளதுஇமற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
குவாட்-கோர், குவால்காம், ஸ்னாப்டிராகன் 425 செயலி இவற்றுள் அடக்கம், மேலும் ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. அதன்பின் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.1, போன்ற பல்வேறு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:
ஹவாய் என்ஜாய் 7பொருத்தவரை 3020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி.


Click it and Unblock the Notifications








