ரூ.10,000 விலைப்பிரிவில் 4ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி உடன் அட்டகாச ஸ்மார்ட்போன்- ஹூவாய் என்ஜாய் 20இ அறிமுகம்!

|

ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனானது ஹார்மோனி ஓஎஸ் 2, மீடியாடெக் ஹீலியோ பி32 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன்

ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன்

ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனானது ஹார்மோனி ஓஎஸ் 2, மீடியாடெக் ஹீலியோ பி32 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹூவாய் என்ஜாய் 20இ சாதனமானது இந்திய விலைப்படி ரூ.11,700 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஹூவாய் என்ஜாய் 20இ சாதனமானது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனானது நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலம் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஹூவாய் என்ஜாய் 20இ ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

ஹூவாய் ஸ்மார்ட்போனானது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. இது ஹூவாய் சூப்பர் சவுண்ட் ஆதரவையும் கொண்டிருக்கிறது. ஹூவாய் என்ஜாய் 20இ விலை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.11,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்சேமிப்பு வகையின் விலை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை. ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 11-க்கு முன்பாக அனுப்பப்படும் எனவும் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரூ.600 வரை தள்ளுபடி

ரூ.600 வரை தள்ளுபடி

ஹூவாய் தனது புதிய ஸ்மார்ட்போனை மேஜிக் நைட் பிளாக், பாண்டம் வயலட் மற்றும் கிஜிங் ஃபாரஸ்ட் வண்ண விருப்பங்களில் வரும் வழங்குகிறது. விமால்-ல் ஹூவாய் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தோராயமாக ரூ.600 வரை தள்ளுபடியுடன் வரும் என கூறப்படுகிறது. ஹூவாய் என்ஜாய் 20இ 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை தோராயமாக இந்திய மதிப்புப்படி ரூ.11,100 ஆக வாங்கலாம்.

ஹூவாய் 20இ விவரக்குறிப்புகள்

ஹூவாய் 20இ விவரக்குறிப்புகள்

ஹூவாய் 20இ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இரட்டை நானோ சிம் ஆதரவுடன் நிறுவனத்தின் தனியுரிமை ஹார்மனி ஓஎஸ் 2 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஹூவாய் ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. டிஎஃப்ஐ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 278ppi பிக்சல்கள் அடர்த்தியுடன் வரும் என கூறப்படுகிறது. ஹூவாய் என்ஜாய் 20இ ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் உடன் வருகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

ஹூவாய் என்ஜாய் 20இ இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் வருகிறது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹூவாய் என்ஜாய் 20இ 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற இரண்டு வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது.

இணைப்பு விருப்பங்கள் ஆதரவு

இணைப்பு விருப்பங்கள் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது. இதன் மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, மைக்ரோ எஸ்டி கார்டு யூஎஸ்பி ஆதரவுடன் இது வருகிறது. ஆன் போர்டு சென்சார்களில் சுற்றுப்புற ஒளி சென்சார், கைரோஸ்கோப், ப்ராக்ஸ்மிட்டி சென்சார் மற்றும் ஈர்ப்பு சென்சார்களுடன் வருகிறது. பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் அம்சம் இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. ஹூவாய் என்ஜாய் 20இ அம்சமானது ஹூவாய் சூப்பர் சவுண்ட் சிறப்பான அனுபவத்தோடு வருகிறது. இது 86 டெசிபிள் ஒலி வெளியீட்டை வழங்குவதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 20e Launched with 5000 mAH Battery, 6.3 Inch Display and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X