Home
Mobile

கிரின் 710ஏ எஸ்ஓசி, 6 ஜிபி ரேம் ஆதரவோடு ஹூவாய் என்ஜாய் 20இ (2022): விலை, சிறப்பம்சங்கல் இதோ!

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) ஸ்மார்ட்போன் கிரின் 710ஏ எஸ்ஓசி மற்றும் 6 ஜிபி ரேம் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் என்ஜாய் 20இ (2021) ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இது இந்திய மதிப்புப்படி ரூ.16300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

ஹூவாய் என்ஜாய் 20இ (2022)

ஹூவாய் என்ஜாய் 20இ (2022)

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) ஸ்மார்ட்போன் கிரின் 710ஏ எஸ்ஓசி மற்றும் 6 ஜிபி ரேம் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனானது ஹூவாய்-ன் ஹைசிலிகான் கிரினஅ 710ஏ ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. புதிய டாப் எண்ட் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடந்த ஆண்டு மீடியாடெக் ஹீலியோ பி35 சிப் உடன் அறிமுகமான அசல் என்ஜாய் 20இ போல் இன்றி இருக்கிறது. புதிய அம்சம் மற்றும் சிலிக்கானை தவிர ஹூவாய் என்ஜாய் 20இ (2022)-ல் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்லைட் டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் இரட்டை பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. இது மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களை கொண்டிருக்கிறது.

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) விலை விவரம்

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) விலை விவரம்

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) விலை விவரம் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.16,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மேஜிக் நைட் பிளாக், பாண்டம் பிளாக் மற்றும் கிஜிங் ஃபாரஸ்ட் வண்ண விருப்பத்தில் வாங்கலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் புதிய ஹூவாய் என்ஜாய் 20இ கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை. ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனின் அடிப்படை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.11,600 ஆக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.14,000 ஆக இருக்கிறது. புதிய 6 ஜிபி ரேம் மாறுபாட்டுன் இரண்டு வேரியண்ட்கள் வருகிறது.

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) விவரக்குறிப்புகள்

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) விவரக்குறிப்புகள்

ஹூவாய் என்ஜாய் 20இ (2022) ஸ்மார்ட்போனானது ஹார்மோனி ஓஎஸ் 2 மூலம் இயக்கப்படுகிறது. இது டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ளது. ஹார்மோனி ஓஸ் 2 மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் ஹைசிலிகான் கிரின் 710 ஏ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா வசதியோடு வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனானது முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி ஆதரவை கொண்டிருக்கிறது. ஹூவாய் என்ஜாய் 20இ (2022) சாதனத்தில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது 4ஜி எல்டிஇ, வைஃபை 802, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி உள்ளிட்டவைகளுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இதில் இருக்கிறது. ஹூவாய் என்ஜாய் 20இ (2022) ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 20e (2022) Launched with 6GB RAM, Dual Rear Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X