அசத்தலான ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

|

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேஜிக் நைட் பிளாக், Qijing ஃபாரஸ்ட் மற்றும் Dawn கோல்ட் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 எதிர்பார்த்த கிரிண்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த கிரிண் 710ஏ ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி51 எம்பி4 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 (EMUI 10.1) இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WHO மீண்டும் அறிமுகம் செய்த COVID-19 அப்டேட்ஸ் ஆப்ஸ்.. இப்போது, இந்த ஆப்ஸ் எதற்காக?WHO மீண்டும் அறிமுகம் செய்த COVID-19 அப்டேட்ஸ் ஆப்ஸ்.. இப்போது, இந்த ஆப்ஸ் எதற்காக?

எஸ்இ ஸ்மார்ட்போனின்

ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

எஸ்இ சாதனத்தில் 4ஜிபி/8ஜிபி

ஹூவாய் என்ஜாய் 20 எஸ்இ சாதனத்தில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

பொருத்தப்பட்டுள்ளது, எ

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சம், கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப

புளூடூத் 5இ 5ஜி (SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.14,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 20 SE Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X