ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ அறிமுகம்:5ஜி ஆதரவு, மூன்று கேமரா., விலை தெரியுமா?
ஹூவாய் நிறுவனத்தின் என்ஜாய் 20 ப்ரோ மாடல் 5ஜி ஆதரவோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் மீடியா டெக் டைமன்சிட்டி 800 எஸ்ஓசி உடன் வருகிறது. மூன்று பின்புற கேமரா, வாட்டர் டிராப் ஸ்டைன் டிஸ்ப்ளே நாட்ச் வசதி உள்ளிட்ட வசதிகளோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம்
ஹூவாய் நிறுவனம் தனது அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை என்ஜாய் 20 ப்ரோவில் வழங்கியுள்ளது. இரண்டு வேரியண்டுகளில், மூன்று தனித்துவ வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்
ஹூவாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம். 6 ஜிபி ரேம் மாடலிந் விலை சிஎன்ஒய் 1,999 அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.21,500 ஆக இருக்கும் என தெரிகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மாடல் விலை சிஎன்ஒய் 2,299 இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.24,800 ஆக விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் முன்பதிவுகள் தொடக்கம்
சீனாவில் முன்பதிவுகள் தொடங்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது டார்க் ப்ளூ, கேலக்ஸி சில்வர் மற்றும் மேஜிக் நைட்பிளாக் நிற விருப்பங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ஜூன் 24 ஆம் தேதிமுதல் இந்த ஸ்மார்ட்போன் கையில் கிடைக்கும் என தெரிகிறது.

6.5 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்டு EMUI 10.1 மூலம் இயக்கப்படுகிறது. 6.5 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 1080*2400 பிக்சல்களுடன் வருகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா வசதியோடு 8 மெகாபிக்சல் செகண்டரி நிலை கேமரா உள்ளது. அதேபோல் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா என மூன்று கேமரா வசதி உள்ளது. இதில் 16 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

4,000 எம்ஏஎச் பேட்டரி
ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ 4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W வேக சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இதில் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியும் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு விரிவாக்க வசதியும் இதில் உள்ளது. இதில் 5ஜி ஆதரவோடு, 4 ஜி வோல்ட் இ, வைபை, டைப் சி போர்டல் ஆகியவை இதில் அடங்கும். உலகளாவிய சந்தைகளில் ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோவின் விலை மற்றும் வெளியீடு குறித்த விவரங்கள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications