48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது புதிய ஹூவாய் என்ஜாய் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த திரைவிகிதம் மற்றும் அட்டகாசமான பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சிப்செட் வசதி
ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோ ஹைசிலிகான் கிரிண் 710எப் சிப்செட வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

அட்டகாசமான கேமரா
ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் விலை
ஹூவாய் என்ஜாய் 10 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பிடைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்பவிலை (இந்திய மதிப்பில்) ரூ.12,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications