ஹூவாய் நிறுவனம் மீது அடுக்கடுக்காக அமெரிக்காக குற்றச்சாட்டு.!

சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சீனத் தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் மீது அமெரிக்க நீதித்துறை இர

|

T மொபைல் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை திருட முயன்றதாக சீனத் தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஹூவாய் நிறுவனம் மீது அடுக்கடுக்காக  அமெரிக்காக குற்றச்சாட்டு.!

சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சீனத் தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் மீது அமெரிக்க நீதித்துறை இரு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

T மொபைல் நிறுவனத்தின் வர்த்தகம் திருட முயற்சி:

T மொபைல் நிறுவனத்தின் வர்த்தகம் திருட முயற்சி:

அமெரிக்கவின் T மொபைல் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருட முயன்றதாகவும், ஈரான் மீதான பொருளாதார தடையை ஹவேய் மீறி விட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் செயல்படும் ஸ்கை காம் ((Skycom)) என்ற போலி நிறுவனம் மூலம் ஹவேயின் தயாரிப்புகள் ஈரானில் விற்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

மறுப்பு தெரிவித்த ஹூவாய்:

மறுப்பு தெரிவித்த ஹூவாய்:

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், அமெரிக்க அதிகாரிகள் சுமத்திய அனைத்து குற்றசாட்டுகளையும் மறுத்ததோடு எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.

23 குற்றச்சாட்டுகள்:

23 குற்றச்சாட்டுகள்:

ஹூவாய் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிதித்துறை எழுப்பியது. அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்ற சம்பவங்களில் ஹூவாய் நிறுவன மூத்த நிதி அலுவலர் மெங் வான்சௌக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்காக குற்றச்சாட்டுகள்:

அமெரிக்காக குற்றச்சாட்டுகள்:

ஹூவாய் நிறுவனம் வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், வங்கி ஊழல், விதிமுறை மீறல் மற்றும் அமெரிக்க அரசிடம் போலி அறிக்கைகளை வழங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

எந்த தவறும் செய்யவில்லை:

எந்த தவறும் செய்யவில்லை:

அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஹூவாய் நிறுவனம், டுவிட்டரில் பதில் அளித்துள்ளது. அதில், "ஹூவாய் நிறுவனமோ மற்றும் அதன் துணை நிறுவனங்களோ அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியிருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் ஹூவாய் மூத்த நிதி அலுவலர் மெங் எவ்வித தவறும் செய்யவில்லை. அமெரிக்க நீதிமன்றங்களும் இதேபோன்ற முடிவை எட்டும் என நம்புகிறோம்," என தெரிவித்துள்ளது.

ராணுவ ரகசியங்கள் திருட்டு:

ராணுவ ரகசியங்கள் திருட்டு:

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களையும் ஹூவாய் நிறுவனம் திருடியதாக கூறப்படுகின்றது. இதை சீன ராணுவத்திற்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகின்றது. இதுவே அமெரிக்காவின் முதன்மையான குற்றசாட்டுகளில் ஒன்றாக இருக்கின்றது.

ஹூவாய் கருத்து:

ஹூவாய் கருத்து:

ஹூவாய் நிறுவனம் உலகம் முழுக்க 5ஜிசேவையை துவங்கியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் வர்த்தகம் பாதிக்கப்படுகின்றது. இதனால் தங்கள் நிறுவனம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei denies US charges over technology : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X