Home
Mobile

அசன்டு ஒய் சிரீஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஹுவெய்!

By Super

அசன்டு ஒய் சிரீஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஹுவெய்!
புதிதாக அசன்டு ஒய் சிரீஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது ஹுவெய் நிறுவனம். பெரிதும் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஆன்ட்ராய்டு 2.3.6 ஜென்ஜர்பிரெட் தொழில் நுட்பத்தில் ஹுவெய் நிறுவனத்தின் அசன்டு ஒய்-200 என்ற புதிய ஸ்மார்ட்போன் இயங்கும்.

3.5 இஞ்ச் திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. திரை அளவில் மட்டும் பெரிதாக இல்லாமல் இந்த ஸ்மார்ட்போன், தகவல்களை தெளிவாக காட்டும் எச்விஜிஏ தொடுதிரை வசதியினையும் கொடுக்கும். இதன் 3.1 மெகா பிக்ஸல் கேமரா ஜியோ டேகிங் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

முன்பெல்லாம் ஸ்மார்ட்போன் என்றால் அதில் கேமரா சிறப்பாக உள்ளதா என்று பார்ப்பதோடு சரி என்று இருந்தது. ஆனால் இப்போது அதன் அனைத்து தொழில் நுட்பமும் மிக முக்கியமானதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. 2ஜி நெட்வொர்க் வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ரிமூவபுல் 1,400 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அசன்டு ஹுவெய் ஒய்-200 ஸ்மார்ட்போன் அதிக டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை

டைமிற்கு சப்போர்ட் செய்யும்.

அதிக தொழில் நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போனை விரும்பும் இளைஞர்கள் நிச்சயம் இந்த ஹுவெய் அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போனையும் விரும்புவார்கள். அத்தகைய நவீன வசதிகளையும் வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் விலையிலும் அனைவரையும் கவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X