Home
Mobile

ஹூவேய் ஏர்டெல் கூட்டணியில் இந்தியாவின் முதல் எல்டிஇ ஸ்மார்ட்போன்

By Karthikeyan
ஹூவேய் ஏர்டெல் கூட்டணியில் இந்தியாவின் முதல் எல்டிஇ ஸ்மார்ட்போன்

ஹூவேய் நிறுவனம் சமீபத்தில் அசென்ட் பி1 எல்டிஇ என்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் எல்டி ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏர்டெல்லின் கூட்டணியுடன் களமிறக்குகிறது எச்டிசி. இந்த எல்டிஇ போன் எர்டெல்லின் புதிய எல்டிஇ 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும்.

இந்த பி1 போன் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இதன் 4.3 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். இந்த போனில் டூவல் கோர் க்வல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸர் உள்ளதால் இது மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

மேலும் இந்த போனில் 1ஜிபி ரேம், 4ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.3 முகப்பு கேமரா போன்ற வசதிகளும் உண்டு. இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த அசென்ட் பி1 போன் க்வல்காம் சிப்செட்டில் வருவதால் இந்திய ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் எல்டிஇ பேண்டை சப்போர்ட் செய்யும். இந்த போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது மிக விரைவில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X