விரைவில் விற்பனைக்கு வரும் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!

By Karthikeyan
|
விரைவில் விற்பனைக்கு வரும் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!

லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஹூவாயி நிறுவனம் உலக அளவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த புதிய மொபைலுக்கு ஹூவாயி அசென்ட் பி1 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதை ஒரு சூப்பர் ஸ்லிம் மொபைல் என்று அழைக்கலாம். ஏனெனில் இதன் தடிமன் 7.7 மிமீ மட்டுமே.

ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் இந்த அசென்ட் டூவல் கோர் 1.5 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதன் 4.3 இன்ச் க்யுஎச்டி அமோலெட் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும் பவர்விஆர் எஸ்ஜிஎக்ஸ்54 க்ராபிஸ் சிப்பும் இந்த மொபைலுக்கு வலுசேர்க்க வருகிறது.

கேமராவைப் பொருத்தமட்டில் இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி பின்பக்க கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் முழுமையான எச்டி வீடியோவை பதிவு செய்யலாம். அதோடு 1.3 எம்பி முகப்பு கேமராவும் உள்ளதால் மிகச் சிறப்பாக வீடியோ உரையாடலை நடத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் ஏராளமான மல்டி மீடியா வசதிகளையும் கொண்டிருக்கிறது. தற்போது இந்த போன் சீனாவில் கிடைக்கிறது. மிக விரைவில் ஆஸ்திரேலியா, தைவான், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஹாங்ஹாங் போன்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. உலகச் சந்தையில் இதன் விலை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X