Home
Mobile

அனைத்து வசதிகளுடன் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்கள்

By Super
அனைத்து வசதிகளுடன் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்கள்
அசன்டு II, பிலேஸ் என்ற இரண்டு மொபைல்களையும் சீன நிறுவனமான ஹுவெய் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும் தன்மை கொண்டது.

அதனால் ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைவிட சிறந்த தொழில் நுட்பத்தை வழங்குகிறது.

ஹுவெய் அசன்டு II மொபைலில் 3ஜி வசதி கொடுக்கப்படவில்லை. ஆனால் ஹுவெய் பிலேஸ் மொபைலில் எச்எஸ்டிபிஏ தொழில் நுட்பம் கொண்ட 3ஜி வசதி உள்ளது. ஹுவெய் அசன்டு II மொபைல் 3.5 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது.

ஹுவெய் பிலேஸ் மொபைல் 3.2 இஞ்ச் கெப்பாசிட்டிவ் டச் லஸ்கிரீன் வசதியை கொடுக்கிறது. இந்த இரண்டு மொபைலிலுமே எம்எம்எஸ், இ-மெயில் போன்ற வசதிகள் உள்ளன.

அசன்டு II போன் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவக் கொண்டது. அதோடு 2592 X 1944 பிக்ஸல் மிக உயர்ந்த துல்லியத்தைக் கொடுக்கின்றது.

ஹுவெய் பிலேஸ் மொபைல் 3.2 மெகா பிக்ஸல் கேமராவுடன், 2048 X 1536 அதிக பிக்ஸலை வழங்குகிறது.

ஹுவெய் பிலேஸ் அதிக பிக்ஸல் கொடுத்தாலும் ஹுவெய் அசன்டு II மொபைலைக் காட்டிலும் சற்று குறைவான பிக்ஸலை வழங்குகிறது.

இந்த இரண்டு ஹுவெய் மொபைல்களிலுமே புளூடூத், வைபை, யூஎஸ்பி போன்ற பயன்பாடுகளைப் பெற முடியும். இந்த மொபைல்களின் பேட்டரி தோராயமாக 110 கிராம் எடை கொண்டது.

ஹுவெய் அசன்டு மற்றும் பிலேஸ் ஸ்மார்ட் மொபைல்கள் 1,400 எம்ஏஎச் பேட்டரி பவரை வழங்கக்கூடியது.

இதனால் 3.66 மணி நேரம் டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் வழங்குகிறது.

ஹுவெய் அசன்டு போனில் ஜிபிஎஸ் வசதி இல்லை. ஹுவெய் பிலேஸ் மொபைல் ஜிபிஎஸ் வசதியினை அளிக்கிறது.

அசன்டு II மொபைலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 32ஜிபி மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. ஹுவெய் பிலேஸ் மொபைல் 16ஜிபி வரை மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

ஹுவெய் அசன்டு II மொபைல் தோராயமாக ரூ.6,000 விலையிலும், ஹுவெய் பிலேஸ் மொபைல் ரூ.4,000 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X