Home
Mobile

கைக்கு கச்சிதமாக புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!

By Super

கைக்கு கச்சிதமாக புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!
பிரம்மாண்டமாக கியூவர்டி கீப்பேட் ஸ்லைடர் வடிவமைப்புடன் ஹுவெய் நிறுவனம் அசன்டு ஜி-312 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க உள்ளது. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்பத்தினை வாரி வழங்கும் என்று தாராளமாக நம்பலாம்.

கியூவல்காம் எம்எஸ்எம் 8255டி சிப் தொழில் நுட்பத்தோடு, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இதன் 4 இஞ்ச் திரை டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.

ஒரு கேமரா என்றாலே வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம் தான் அதிலும், டியூவல் கேமரா என்றால் கேட்கவே வேண்டியதில்லை. இந்த ஸ்மார்ட்போனும் டியூவல் கேமரா பட்டியலில் சேரும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசியையும் கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் வாங்குவோரை பெருமை கொள்ள செய்யும்.

4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியையும் இதில் எளிதாக பயன்படுத்தலாம். ஆன்ட்ராய்டு 2.3.6 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் மட்டும் அல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை அப்கிரேட் செய்யும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியோ, இதன் விலையோ இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X