அமெரிக்காவில் வெளியாகும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் அனைவரும் விரும்பும் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். சிறப்பான செயல்பாடுகளை பெற இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
எத்தனை தொழில் நுட்பத்தினை வழங்கும் வசதி இருந்தாலும், அந்த வசதிகளை வேகமாக கொடுக்கும் திறனும் இருக்க வேண்டும். இதில் உள்ள 5 மெகா பிக்ஸல் கேமரா 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தில் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.
2.5 ஜிபி வரை இன்டர்னல் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளும் எக்ஸ்டர்னல் வசதியையும் வழங்கும்.
இதில் பிரவுசிங் பற்றிய கவலையே இல்லை. ஏனெனில் இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் வசதியினையும் பெற முடியும். 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக ஸ்மார்ட்டாக சப்போர்ட் செய்கிறது.
இதில் இருக்கும் எல்ஐ-அயான் ஸ்டான்டர்டு பேட்டரி, கேமஸ் மற்றும் தகவல்களை டவுன்லோட் செய்வதற்கு சிறப்பாகவே ஒத்துழைக்கும். ஹுவெய் அசன்டு ஜி-300 ஸ்மார்ட்போன் வோடாஃபோன் சேவையில் பெறலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இன்று அமெரிக்கா மார்கெட்டில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஹுவெய் அசன்டு ஸ்மார்ட்போனை ரூ.8,000 விலையில் பெறலாம்.


Click it and Unblock the Notifications