ஹுவாய் அசென்ட் டி2 இந்தியாவிற்க்கு விரைவில் வருகிறது!!!
சீனாவில் பிரபலமாக உள்ள டெக் நிறுவனங்கள் தங்கள் புராடெக்ட்களை இந்தியாவில் படிப்படியாக வெளியிட ஆயித்தமாகி வருகின்றனர். உலக அளவில் உள்ள டாப் 10 ஸ்மார்ட்போன் கம்பெனிகளில் ஹுவாய் நிறுவனமும் ஒன்று.
ஹுவாய் நிறுவனம் தனது லேட்டெஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன அசென்ட் டி2வை விரைவில் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அசென்ட் மேட் என்ற 6 இன்ஞ் பேப்லெட் போனை இந்தியாவில் வெளியிட்டது.
ஸ்லிம் ஸ்மார்ட்போனான அசெனட் பி6 தான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை பற்றி ஹுவாய் இந்தியன் வெப்சைட்டில் எந்த தகவலும் இல்லை. அசென்ட் டி2 விரைவில் வெளிவரும் என்று இந்த வெப்சைட்டில் உள்ளது.
இனி வரும் மாதங்களில் நிறைய ஹச்டி ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன. அசென்ட் டி2வின் விலை இன்னும் வெளியிடவில்லை இதன் விலை ரூ.30,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி உள்ள சில சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஹுவாய் அசென்ட் டி2
அசென்ட் டி2, 5 இன்ஞ் சூப்பர் ரெடினா டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலுஸன் 1920*1080 பிக்சல் ஆகும்.
இது 9.9mm திக்னஸ் மற்றும் 170 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் வாட்டர் புரூப் மற்றும் டஸ்ட் புரூப் உள்ளது.

ஹுவாய் அசென்ட் டி2
அசென்ட் டி2, 1.5GHZ கூவாட் கோர் பிராசஸர் கொண்டுள்ளது. இதில் 2ஜிபி ராம் மற்றும் 32ஜிபி ரோம் உள்ளது.

ஹுவாய் அசென்ட் டி2
அசென்ட் டி2வில் ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ் வரும் என தெரிகிறது. ஆனால் கூகுள் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டுவிட்டது. ஹுவாய் நிறுவனம் எப்பொழுது புதிய ஓஎஸ் உடன் மொபைலை வெளியிடும் என்று தெரியவில்லை.

ஹுவாய் அசென்ட் டி2
இதில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் எல்ஈடி பிளாஷ், 1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளது.

ஹுவாய் அசென்ட் டி2
ஹுவாய் அசென்ட் டி2வின் பிளஸ் பாயின்ட் இதன் பேட்டரி தான். இதில் 3000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications