மொபைல் கண்காட்சியில் காட்சியளிக்க வரும் அசன்டு டி-1 கியூ ஹுவெய் ஸ்மார்ட்போன்!

Posted By:

மொபைல் கண்காட்சியில் காட்சியளிக்க வரும் அசன்டு டி-1 கியூ ஹுவெய் ஸ்மார்ட்போன்!

கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவிற்கு அடுத்தபடியாக அனைவராலும் அதிகம் எதிர் பார்க்கப்படுவது மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சி. இந்த கண்காட்சியில் ஹுவெய் நிறுவனம் அசன்டு டி-1 கியூ என்ற புதிய ஸ்மார்ட்போனை அதிகார பூர்வமாக வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கியூட்டாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கூவாட் கோர் டெக்ரா-3 பிராஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

மொபைல் வேர்ல்டு கண்காட்சிக்கு இன்னும் சில தினங்களே இருந்தாலும் இந்த புதிய அசன்டு-1 கியூ ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறது ஹுவெய் நிறுவனம். ஆனால் ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம்.

ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஹுவெய் ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot