Home
Mobile

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!

By Super

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!
சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் ஹுவெய் நிறுவனம் புதிய அசன்டு சி-8812 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இதனால் சிறப்பான தொழில் நுட்பத்தினையும் பெற முடியும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க கியூவல்காம் எம்எஸ்எம் 76227-ஏ பிராசஸரையும் கொண்டது.

இரட்டை கேமராவுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் போதுமான புகைப்படங்களையும், விடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 3.1 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சீனா மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். பொழுதுபோக்கு அம்சமாக இதில் ஆடியோ மற்றம் வீடியோ பிளேயர் வசதியும் உள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் புளூடூத் வசதியில் இருந்து, 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதி வரை இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக

பெற முடியும்.

இது போன்ற உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்த அதற்கு தகுந்த வகையில் பேட்டரியும் சிறப்பாக சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த ஸ்மார்ட்போனில் 1,350 எம்ஏஎச் பேட்டரி அதிக நேரம் நீடித்து உழைக்கும். இதனால் எந்தவிதமான தடையும் இல்லைமல், தொடர்ந்து தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாவது பற்றி எந்த விதமான தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. ஹுவெய் அசன்டு சி-8812 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X