தோற்றத்தில் 'பந்தா' காட்டும் எச்டிசி மொபைல்!

Posted By: Staff
தோற்றத்தில் 'பந்தா' காட்டும் எச்டிசி மொபைல்!
பார்ப்பவர்களின் கண்களை கவரும் அளவிற்கு ஜொலிக்கும் மொபைல்களை, நிறைய மொபைல் நிறுவனங்கள் உருவாக்கினாலும், சில மாடல்கள் மட்டும் வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றன.

எனவே, வாடிக்கையாளர்களின் ரசனையை நன்கு புரிந்துகொண்டு டச் ப்ரோ-2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யதுள்ளது எச்டிசி நிறுவனம்.   டச் ப்ரோ-2 ஸ்மார்ட்போன் 3.6 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.

டிஎப்டி திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் 65கே கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். இந்த எச்டிசி டச் ப்ரோ-2 ஸ்மார்ட்போனில் எச்எஸ்டிபிஏ 3ஜி தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

178.5 கிராம் எடை கொண்ட இந்த டச் ப்ரோ-2 ஸ்மார்ட்போன், கியூவர்டி கீப்பேட் வசதியையும் அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் புதிதாக டச்ஃப்லோ 3-டி ஃபிங்கர் ஸ்வைப் நேவிகேஷன் தொழில் நுட்பத்தினை வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை போன்ற சிறந்த தொழில் நுட்பத்தினை பெற முடியும். ஆகவே வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் வசதியை எளிதாக பெறலாம். இதில் மினி யூஎஸ்பி வெர்ஷன் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், 2048 x 1536 திரை துல்லியம் கொண்ட 3.2 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ கேமராவும் இதில் உள்ளது. இத்தனை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்மொபைல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இதன் அட்ரினோ 130 ஜிபியூ, 528 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் 11 பிராசஸர் சிறந்த கிராஃபிக்ஸ் தொழில் நுட்பம் வழங்க துணை புரிகிறது. ஏகபோக வசதிகளை அளிக்கும் இந்த டச் ப்ரோ-2 ஸ்மார்ட்மொபைல் ரூ.20,000

விலையில் இருந்து ரூ.30,000 விலை வரையில் இந்திய சந்தையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்