'ஸ்பீடா' இயங்கும் எச்டிசி ஸீட்டா மொபைல்!

Posted By: Staff
'ஸ்பீடா' இயங்கும் எச்டிசி ஸீட்டா மொபைல்!
மொபைல் உலகில் எச்டிசி நிறுவனம் படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அடுத்தடுத்து புதிய புதிய மொபைல்களை களமிறக்கி வாடிக்கையாளர்களின் கவனம் அங்கும் இங்கும் சென்று விடமால் பார்த்துக்கொண்டு வருகிறது எச்டிசி.

இந்த வரிசையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மார்க்கெட்டை அதகளப்படுத்த ஸீட்டா என்ற பெயரில் புதிய மொபைலை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட இருக்கிறது எச்டிசி நிறவனம்.

இந்த புதிய மொபைல் எந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது என்பதை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஸீட்டா மொபைல் ஆன்ட்ராய்டு வெர்ஷன் ஐஸ்க்ரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது.

இந்த மொபைலில் 4.5 இஞ்ச் அகன்ற திரையை கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த திரை 720பி உயர்ந்த திரை துல்லியத்தை கொடுக்கும்.

இந்த மொபைலில் இரண்டு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒன்று 8 மெகா பிக்ஸல் கேமராவும், வீடியோ காலிங் செய்வதற்காக மற்றொன்று 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதனால் சிறந்த புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ சாட்டிங் போன்ற வசதிகளை பெறலாம்.

கிட்டத்தட்ட இந்த ஸீட்டா மொபைல், எச்டிசியின் எட்ஜ் மொபைல் போலவே உள்ளது. ஜிபிஎஸ், மல்டி மீடியா, போன்ற பல வசதிகளும் இதில் உண்டு.

எச்டிசி ஸீட்டா மொபைல் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும், விலை பற்றிய விளக்கங்களையும் பெற வேண்டும் என்றால் இன்னும் சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot