பிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.!
எச்டிசி நிறுவனம் அன்மையில் தனது Wildfire X என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இன்று அந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளம் வழியே விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மதியம் 12மணி முதல் விற்பனை துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்டிசி Wildfire X ஸ்மார்ட்போன் மாடல் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட Wildfire X சாதனத்தின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட Wildfire X சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
எச்டிசி Wildfire X ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பினே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகுவும் அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா அம்சம்:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி hybrid Zoom+ 5எம்பி டெப்த் சென்சார் 10 என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி:
எச்டிசி Wildfire X ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிப்செட் வசதி:
இந்த எச்டிசி Wildfire X ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

Wildfire X பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 3330எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம்
ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications