எச்டிசி வைல்டு ஃபயர் vs மோட்டோரோலா ஃபயர்- ஒப்பீட்டு அலசல்

By Super
|
எச்டிசி வைல்டு ஃபயர் vs மோட்டோரோலா ஃபயர்- ஒப்பீட்டு அலசல்
எச்டிசி வைல்டு ஃபயர் மாடல் மல்டி டச் வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள டச் சென்சிடிவ் கன்ட்ரோல் இந்த ஹேண்செட்டிற்கு மிகுந்த சிறப்பை அளிக்கிறது. இந்த மாடலில் ஆன்ட்ராய்டு 2.1 வெர்ஷன் எக்ளேர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. மோட்டரோலா ஃபயர் எக்ஸ்டி-311 மாடல் ஆன்ட்ராய்டு 3.0 ஜிஞ்சர்பிரீடு ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது.

இந்த எச்டிசி மாடலில் க்யூவல்காம் எம்எஸ்எம்-72225 528 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா மாடலில் 600 எம்எச்இசட் ஏஆர்எம்-11 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அட்ரினோ ஜிபியூ மற்றும் க்யூவல்காம் எம்எஸ்எம்-72227-1 சிப்செட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. எச்டிசி வைல்டு ஃபயர் மாடல் ப்ளாக், பிரவுன், வைட், ரெட், சில்வர் நிறங்களில் கிடைக்கும். ஆனால், மோட்டோரோலா மாடல் கறுப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.

எச்டிசி மாடல் 3.2 இஞ்ச் டிஸ்ப்ளே, டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. இதில் 16 எம் கலர் சப்போர்ட்டும் கிடைக்கிறது. 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது. மோட்டோரோலா மாடலில் 2.8 இஞ்ச் டிஎப்டி கொண்டுள்ளது. இது 256 கே கலர் சப்போர்ட் கொடுக்கிறது. டைப் செய்வதற்கு எளிதாக இருக்க கிவெர்ட்டி கீப்பேடு வசதியும் இதில் உள்ளது.

எச்டிசி வைல்டுபையரில் 5எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தை இந்த கேமரா வழங்குகிறது. இதனால் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் லெட் ஃப்ளாஷ் வசதியினைப் பெற முடியும். மோட்டோரோலா மாடலில் 3.2 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தில் புகைப்படங்களை பெற முடியும். இது ஒரு நிமிடத்திற்கு 480 பிக்ஸல் வேகத்தில் வீடியோ ரிக்கார்டிங் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.

எச்டிசி மாடலில் 384 எம்பி ரேம் மற்றும் 512 எம்பி ரோம் வசதியும் உள்ளது. இதனால் எளிதான வகையில் தகவல் சேமிப்பு வசதியைப் பெற முடியும். மோட்டோரோலா மாடலில் 256 எம்பி ரேம்,512 எம்பி ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்டு ஸ்டோரேஜ் 150 எம்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வசதிகள் இதில் உள்ளது. இதனால் 32 ஜிபி வரை மெமரி வசதியினைப் பெற முடியும்.

இந்த எச்டிசி வைல்டு ஃபயர் மாடலை ரூ.9,999 என்ற விலைக்கும், மோட்டோரோலா பயர் மாடலை ரூ.8,999 என்ற விலைக்கும் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X