Home
Mobile

எச்டிசி வைல்டு பையர் & மோட்டோரோலா டிபை - ஒரு ஒப்பீடு

By Super
எச்டிசி வைல்டு பையர் & மோட்டோரோலா டிபை - ஒரு ஒப்பீடு
தரமான மொபைல் உற்பத்திக்கு பெயர் பெற்ற எச்டிசி நிறுவனம் எச்டிசி வைல்டு பையர் என்ற புதிய மொபைல் ஒன்றை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட்டுடன் அன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்பிரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா டிபை என்ற ஆன்ட்ராய்டு 2.1 கொண்ட மொபைலை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.

மோட்டோரோலா டிபை பெரிய திரையைக் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனுடைய லைவ் விட்ஜெட்டுடன் கூடிய மோட்டோப்லர் யுஐ மற்றும் தொடுதல் மூலம் இயக்கும் தொழில்நுட்பம் கொண்ட திரை கண்டிப்பாக எச்டிசி வைல்டு பையருக்கு போட்டியாக இருக்கிறது. எச்டிசி வைல்டு பையரும் பெரிய திரையை கொண்டிருக்கிறது.

மற்ற வசதிகள் இரண்டு மொபைல்களிலும் பொதுவாக இல்லாவிட்டாலும் எச்டிசி வைல்டு பையர் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக டர்ன் டு மியூட், லிஃப்ட் டு டுயூன் டவன் ஃப்லிப் மற்றும் ஸ்பீக்கர் போனுக்கான ஃப்லிப் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். மேலும் இதனுடைய 2.1 யுஐ சென்ஸார் மற்ற மொபைல்களில் இல்லாத ஒன்றாகும். இரண்டு மொபைல்களுமே எம்பி-3 வேவ் ரிங்டோன் கம்பாட்டிபிலிட்டியைக் கொண்டுள்ளன.

மோட்டோரோலா டிபை 2ஜிபி இன்பில்ட் சேமிப்பு வசதியையும், 512எம்பி ராம் ப்ராஸஸரையும் 512எம்பி ரோமையும் கொண்டுள்ளது. எச்டிசி வைல்டு பையர் அதே வசதிகளுடன் கம்ப்யூட்டருடன் இணைக்கும் வகையில் யுஎஸ்பி போர்ட்டை கொண்டுள்ளது. இதில், 7 மணிநேரம் வரை தொடர்ந்து பேசும் பேக்கப்பை கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் மோட்டோரோலா டிபை மொத்தமாக 238 மணிநேர பேட்டரி ஸ்டான்ட்-பை மோடிலும், 6 மணி 48 நிமிடங்கள் வரை தொடர்ந்து பேசக்கூடிய பேக்கப்பையும் கொண்டுள்ளது.

தொடர்பு வசதிகளை எடுத்துக் கொண்டால் மோட்டோரோலா டிபை பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மற்றும் மை ஸ்பேஸ் இன்டக்ரேஷன் போன்றவற்றை விரைவாக இயக்கும் வசதியை பெற்றுள்ளது. எச்டிசி வைல்டு பையர் மேற்சொன்ன இந்த வசதிகள் இல்லையென்றாலும் விரைவாக இயக்கக்கூடிய இன்டர்நெட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இது டிஜிட்டல் கம்பாஸ், மேப் வீயுவிங்கோடு கூடிய கூகள் தேடல், மற்றும் பிக்காஸா இன்டக்ரேஷன் வசதிகளையும் வழங்குகிறது. இதிலுள்ள யுடியூப், கூகள் உரையாடல் ஆகிய வசதிகள் இதன் சிறப்பை வலுப்படுத்துகின்றன.

5எம்பி கேமராவுடன் கூடிய எச்டிசி வைல்டு பையர் மொபைல் ரூ. 13,399க்கும், மோட்டோரோலா டிபை 2ஜிபி ரூ. 15,500க்கும் கிடைக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X