மார்க்கெட்டே திணறப்போகுது.. 64எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய HTC ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
எச்டிசி நிறுவனம் விரைவில் எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் (HTC Wildfire E7 Plus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் முதலில் UAE-யில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் அம்சங்கள் (HTC Wildfire E7 Plus Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்செல் டிஸ்பிளேவை (incell display) கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 ஒ 2460 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (MediaTek Helio G99 chipset) உடன் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த எச்டிசி போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த எச்டிசி போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers) வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் டூயல் நானோ சிம் வசதி (Nano SIM) உடன் இந்த எச்டிசி போன் அறிமுகமாகும்.
5000mAh பேட்டரி உடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவரை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சாரஜிங் வசதியும் உள்ளது. பின்பு இந்த போனின் எடை 212 கிராம் ஆகும்.
டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0,ஜிபிஎஸ், க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ7 பிளஸ் போனில் உள்ளன. மேலும் இந்த புதிய எச்டிசி போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








