Home
Mobile

புதிய HTC போன் அறிமுகம்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

எச்டிசி நிறுவனம் தனது புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே (HTC Wildfire E4 Plus) ஸ்மார்ட்போன் மாடலை தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே அம்சங்கள் (HTC Wildfire E4 Plus Specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

புதிய HTC போன் அறிமுகம்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

தரமான யுனிசாக் டி606 (Unisoc T606) சிப்செட் வசதியுடன் இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கடைக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய எச்டிசி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி மெயின் கேமரா + 0.3எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன். மேலும் ஃபேஸ் அன்லாக் வசதியும் இந்த எச்டிசி போனில் உள்ளது. இந்த போனின் எடை 200 கிராம் ஆகும். அதேபோல் எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

புதிய HTC போன் அறிமுகம்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. டூயல் சிம், எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே போனின் விலை THB 3,599 (இந்திய மதிப்பில் ரூ.9,745) ஆகும். லைட் ப்ளூ (Light Blue), பிளாக் (Black) நிறங்களில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ4 பிளே ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HTC Wildfire E4 Plus launched in Thailand: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X