க்யூட்டான கட்டமைப்புடன் களமிறங்கும் எச்டிசி வைல்ட்ஃபயர் இ3: இதோ அம்சங்கள்!

|

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஹீலியோ பி22 எஸ்ஓசி செயலி, குவாட் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைக்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழு அம்சங்களை பார்க்கலாம்.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 1560x720 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இதில் 88 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது. எச்டிசி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ஸ்மார்ட்போனின் வாரிசு

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ஸ்மார்ட்போனின் வாரிசு

எச்டிசி நிறுவனம் ரஷ்யாவில் எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனானது எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களிலும் அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 சிறப்பம்சங்கள்

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 சிறப்பம்சங்கள்

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 1560x720 பிக்சல்கள் தீர்மானத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இது 88 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் 2GHz ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ பி22 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு 128ஜிபி மெமரி வரை நீட்டிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது.

அவசியமான கண்டுபிடிப்பு: அவசியமான கண்டுபிடிப்பு: "ஆட்டிசம் குழந்தைகள்"- குறைபாட்டை முன்கூட்டியே கண்டறியும் பிரத்யேக கருவி!

வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

எச்டிசி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா இதில் இருக்கிறது. மேலும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மூன்றாம் நிலை கேமராவாக பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஏஐ ஃபேஸ் அன்லாக் அம்சம்

ஏஐ ஃபேஸ் அன்லாக் அம்சம்

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு ஏஐ ஃபேஸ் அன்லாக் அம்சமும் கூடுதலாக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரும் இருக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 ஸ்மார்ட்போனில் இரட்டை 4ஜி வோல்ட்இ, வைஃபை 8.2,11, ப்ளூடூத் 4.2, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 186 கிராம் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HTC Wildfire E3 Smartphone Launching With 4GB RAM, Quad Rear Camera Setup

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X